தமிழகத்தில் சற்று குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு..!!
தமிழகத்தில் சற்று குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 32,79,284 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 5,246 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 21,287 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,20,974 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 28,156 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,29,961 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,11,863 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,35,991 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,02,97,961 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,460 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

