சற்று குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை !!
சற்று குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை !!

தங்கம் விலையானது திங்கள் முதல் தொடர் உயர்வில் இருந்த நிலையில் நேற்றும் இன்றும் சற்று விலை குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதி அடையவைத்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம்,நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,056-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 40 குறைந்து ரூ. 36,016-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 4502 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 75.20 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.80 விலை குறைந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் தங்கத்தின் விலை 36,000 கடந்து விற்பனையாகிறது.
newstm.in
Tags:
Next Story

