Theme Check

புஷ்பா ஸ்டைலில் செம்மரக்கட்டைகள் கடத்தல்!!

புஷ்பா ஸ்டைலில் செம்மரக்கட்டைகள் கடத்தல்!!

புஷ்பா ஸ்டைலில் செம்மரக்கட்டைகள் கடத்தல்!!
X

அல்லு அர்ஜூன் நடித்து மெகா ஹிட் ஆன புஷ்பா திரைப்பட ஸ்டைலில் செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

செம்மரக்கட்டை கடத்தல் குறித்து வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று எல்லோரும் ஆர்வமுடன் உள்ளனர். அந்த அளவுக்கு செம்மரக்கடத்தல் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

அப்படி செம்மரக்கட்டைகளை கடத்தலாம் என்று திட்டமிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. யாசீன் இனாயத்துல்லா என்ற ஓட்டுநர் கர்நாடகா - ஆந்திரா எல்லையில் வெட்டப்பட்ட செம்மரக் கட்டைகளை, மகாராஷ்டிராவுக்கு கடத்தியுள்ளார்.

yasin

படத்தில் பால் லாரி டேங்கை 2 பாகங்களாக பிரித்து, மேல் பக்கத்தில் பாலையும், அடியில் செம்மரக்கட்டைகளையும் அல்லு அர்ஜுன் கடத்துவார். அதே ஸ்டைலில் யாசின் செம்மரக் கட்டைகளை அடியிலும் அதற்கு மேல், காய்கறி பழங்கள் பெட்டிகளையும் வைத்து கடத்தியுள்ளார்.

ஹைலைட்டாக, கொரோனா அத்தியாவசிய பொருட்கள் அவசரம் என்ற ஸ்டிக்கரையும் லாரியின் முகப்பில் ஒட்டினார். லாரி மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் மீரஜ்நகர் காந்தி சவுக் அருகே வந்தபோது, போலீசார் சோதனையிட்டனர்.

சந்தேகப்படும்படி இருந்ததால் கூடுதல் சோதனை நடத்திய போலீசார் யாசின் கடத்தலில் ஈடுபடுவதை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் லாரியில் கொண்டுவரப்பட்ட கட்டைகளின் மதிப்பு ரூ. 2.45 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it