அவ்வளவு வெறி... பீர், மது விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு !
அவ்வளவு வெறி... பீர், மது விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு !

பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று பாதிப்பு, பெரும்பாலானோரின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது என்றே கூறலாம். இதில் பல மாற்றங்கள் இருந்தாலும், மது அருந்துபவர்களின் மாற்றத்தையும் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு அடுத்தடுத்து முழு முடக்கம் காரணமாக மது குடிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் அந்த பழக்கத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. முழு முடக்கம் நீங்கியபிறகும், மது குடிப்பவர்கள் எண்ணிக்கை உயரவில்லை. சுமார் 20 சதவீதம் பேர் மது போதையில் இருந்து விடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதுபோல மது பாட்டில்கள் விற்பனையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது. மதுபாட்டில்கள் விற்பனை அதிகரிப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி இந்தியாவில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வரும் ஆண்டுகளில் மது விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
newstm.in

