பூமியைத் தாக்கிய சூரிய புயல்!!
பூமியைத் தாக்கிய சூரிய புயல்!!

சூரியனில் ஏற்பட்ட ஜி1 வகை புயல் பூமியை தாக்கியது.
சூரியனில் ஏற்பட்ட வெப்பப் புயல் காரணமாக உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ) மற்றும் வான்வெளி தட்பவெப்ப முன்கணிப்பு மையம் (எஸ்டபிள்யுபிசி) எச்சரிக்கை விடுத்தது.
ஜி1-வகை புவிகாந்த அலை கே-இன்டக்ஸ் 5 என்ற அளவில் பூமியைத் தாக்கக்கூடும். இந்த தாக்கத்தால் பலவீனமான மின் இணைப்புகளில் சில வேறுபாடுகள் பூமியில் ஏற்படலாம் என்று என்ஓஏஏ - எஸ்டபிள்யுபிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக, வான்வழி போக்குவரத்து, செயற்கைக் கோள் செயல்பாடுகளில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், காலநிலைகளுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் விலங்குகளும் கூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் உலகம் முழுவதும் இணைய சேவை பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில், இன்று காலை சூரியனில் ஏற்பட்ட ஜி1 வகை புயல் பூமியை தாக்கியது. ஆனால் அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் சூரிய புயல் துகள்களால் அமெரிக்காவில் வண்ணமயமான விண்ணொளிகள் தோன்றின.
newstm.in

