குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர் மகனுடன் கார் விபத்தில் பலி - துடித்துப்போன மனைவி!
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லாம்பேட்டை சென்னகாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா. இவர் குவைத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக நாடு திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

குவைத்தில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய நபர் விமான நிலையத்தில் இருந்து வீட்டிக்கு செல்லும் போது மகன் மற்றும் தாய் உடன் கார் விபத்தில் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லாம்பேட்டை சென்னகாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா. இவர் குவைத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக நாடு திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல அவரது எட்டு வயது மகன் மற்றும் தாய் வந்திருந்தனர்.

மூவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, சின்ன ஓரம் பாடு என்ற கிராமம் பகுதியில் எதிரே வந்த டேங்கர் லாரி கார் மீது மோதியது. இதில் பாப்பையா, சிறுவன், பாப்பையாவின் தாய் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவர், மகன் மற்றும் மாமியார் உடன் சடலமாக வீட்டுக்கு வந்ததை பார்த்த பாப்பையாவின் மனைவி கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

