வைரலாகும் ஷிவாங்கி பாடிய பாடல்!!
வைரலாகும் ஷிவாங்கி பாடிய பாடல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி உலக அளவில் மிகவும் பிரபலம்.அதிலும் சீசன் 2 செம ஹிட் ஆனது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஷிவாங்கி, புகழ், பாலா என அந்த நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகளின் சேட்டைக்காகவே பலரும் விரும்பி பார்க்கும் ஷோவாக குக் வித் கோமாளி உள்ளது.
தமிழில் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வேற்று மொழிகளில் இந்நிகழ்ச்சியை தயாரிக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்களும் சரி கோமாளிகளும் சரி மிகப்பெரிய அளவில் பிரபலமானது மட்டுமன்றி அதில் உள்ள பலருக்கும் திரையுலக வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார். இவர் மட்டுமின்றி குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷா குப்தாவும் திரௌபதி பட இயக்குநரின் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
அந்த வகையில் பிரபல நடிகரின் படத்திற்காக ஷிவாங்கி பாடிய பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்த ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப்படத்திற்காக ஷிவாங்கி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாம் விஷால் ஆகிய இருவரும் இணைந்து பாடிய பாடல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சாந்தனு பாக்கியராஜ் ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகிபாபு, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

