பெற்ற தாயை மண்ணை திங்கவைத்த மகன்கள்.. வழக்குப்பதிவு செய்த போலீசார் !
பெற்ற தாயை மண்ணை திங்கவைத்த மகன்கள்.. வழக்குப்பதிவு செய்த போலீசார் !

பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த 2 மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் காவிரி நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் திருஞானம் என்பவரின் மனைவி ஞானஜோதி (70). ஓய்வுபெற்ற தூர்தர்ஷன் ஊழியரான திருஞானம் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் ஞானஜோதி மகன்கள் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இவர்களின் மூத்த மகன் சண்முகசுந்தரம் காவல் ஆய்வாளராகவும், 2ஆவது மகன் வெங்கடேசன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சொத்து பிரச்சினை காரணமாக, ஞானஜோதியை பார்ப்பதில் அவரது மகன்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2 மகன்களும் தஞ்சாவூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அவரை பூட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போதிய உணவு, தண்ணீர் வழங்கப்படாததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த ஞானஜோதி, வீட்டுக்குள் தரையிலுள்ள மண்ணை தின்று வந்துள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், ஞானஜோதியின் நிலை குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பினார். அவரது உத்தரவின்பேரில் அதிகாரிகள், கடந்த 14ஆம் தேதி இரவு ஞானஜோதி இருந்த வீட்டுக்குச் சென்று, அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து, இதுதொடர்பான புகாரில் தாயை பராமரிக்காமல் பூட்டி வைத்திருந்த 2 மகன்களின்மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

