Theme Check

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்.. ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு..!!

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்.. ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு..!!

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்.. ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு..!!
X

மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (75). இவரது கணவர் சேதுராமன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவருக்குச் சொந்தமான வீட்டை விற்று மகன்களான கேசவன், முருகவேல் ஆகிய இருவருக்கும் பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு 2 லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் வைத்துள்ளார்.

இந்நிலையில், வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை 2 மாதத்திற்கு முன்பு ஏடிஎம் கார்டு மூலம் அவரது மகன்கள் எடுத்துக் கொண்டதாகவும், தன்னிடம் இருந்த 10 சவரன் நகைகளையும் வாங்கிக் கொண்டதாகவும் மூதாட்டி கூறினார்.
சொத்தை அபகரித்த மகன்கள் வீட்டை விட்டு விரட்டியதாக மதுரை ஆட்சியரிடம்  மூதாட்டி புகார்
தனியாக வசித்து வந்த மூதாட்டி லட்சுமி, பார்வை குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக தனது மூத்த மகன் கேசவன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, மூதாட்டியின் மகனும் மருமகளும் உணவு வழங்காமல் மூதாட்டியை அடித்து துன்புறுத்தியதோடு வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.
சொத்தை அபகரித்த மகன்கள் வீட்டை விட்டு விரட்டியதாக மதுரை ஆட்சியரிடம்  மூதாட்டி புகார்
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி, இது குறித்து ஆட்சியரிடம் முறையிட்டார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த ஆட்சியர், மூதாட்டியை உடனடியாக முதியோர் இல்லத்தில் சேர்க்கவும், மூதாட்டியின் புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

Next Story
Share it