சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர்
சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர்

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் சட்டமன்ற விதிகள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக, அதிமுகவை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவையில் மின்னனு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் . சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். வரும் பட்ஜெட்டை இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யவும் ஆலோசனை நடைபெறுகிறது. தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருவது திமுக அரசுதான்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் டேப்லட் வழங்கப்படும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.
Tags:
Next Story

