‘பேங்ல இருந்து பேசுறோம்' பெண் போன்று பேசி ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த இளைஞர்!
‘பேங்ல இருந்து பேசுறோம்' பெண் போன்று பேசி ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த இளைஞர்!

'ஹலோ.. நான் உங்க பேங்ல இருந்து பேசுறோம்.. வங்க ஏடிஎம் கார்டு லாக்காகி விட்டது. எனவே பின் நபம்பர் கொடுங்க.. ஓடிஎஸ் வரும் அதனை கூறுங்கள்' என ஒரு இளம்பெண் இனிமையான குரலில் பேச அனைவரது செல்போனிற்கும் அழைப்பு வந்திருக்கும். இதில் பலர் தப்பித்தாலும் சிலர் சிக்கி பெருமளவில் பணத்தை இழந்திருப்பர். இந்த சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சென்னை சைபர்கிரைம் போலீசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்தன.
எனவே இந்த புகார்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததோடு, மோசடி கும்பலையும் வலைவீசி தேடிவந்தனர். இதனிடையே நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த செல்வம் என்பவர் மகன் வளன் ராஜ்குமார், அதே பகுதியில் ஆன்லைன் பிசினஸ் செய்வதாகக்கூறி பல்வேறு விளம்பரங்கள் செய்து தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இவர் போனில் பேசியவாறே, மக்களிடம் ஏடிஎம் கார்டு நம்பர்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் இவரை சென்னை மைலாப்பூர் சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மாற்று குரலில் அதாவது பெண் குரலில் பேசியும் பலரிடம் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கையும் சைபர்கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அந்த கணக்கில் சுமார் ரூ.8 லட்சம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரை தொடர்ந்து இதில் சம்பந்தபட்ட மேலும் சிலரை சைபர்கிரைம் போலீசார் விசாரித்தும் தேடியும் வருகின்றனர்.
newstm.in



