18- 44 வயதினருக்கு சிறப்பு ஏற்பாடு.. தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து கொள்ளலாம் !
18- 44 வயதினருக்கு சிறப்பு ஏற்பாடு.. தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து கொள்ளலாம் !

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில் கடந்த 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதில் தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த வயது பிரிவினருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் முறை மட்டுமே அமலில் இருந்தது.
இவ்வாறு பதிவு செய்யும் பலர், குறித்த நேரத்தில் தடுப்பூசி மையத்திற்கு வராததால் பல இடங்களில் தடுப்பூசி டோஸ்கள் வீணாவது தெரியவந்தது. எனவே இதை தடுக்கும் வகையில் தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து உடனடியாக தடுப்பூசி போடும் வசதியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.

அந்தவகையில் தடுப்பூசி மையங்களிலேயே இனி பதிவுகளை மேற்கொள கோவின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும், தனியார் மையங்களில் இருக்காது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் இந்த வசதி குறித்து அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

அதேநேரத்தில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாகுறை காரணமாக 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தாமதமாகவும் சில இடங்களில் நிறுத்தப்பட்டும் உள்ளது.
newstm.in

