சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை..!
சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில், பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், மாணவர்களுக்கு தற்போது சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

