Theme Check

இந்த திட்டங்களில் தனி கவனம்.. அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!

இந்த திட்டங்களில் தனி கவனம்.. அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!

இந்த திட்டங்களில் தனி கவனம்.. அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!
X

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (1-ம் தேதி) 19 அரசு துறைகளின் செயலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர், “ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது.

பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். நம் மீது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படுவதை ஆய்வு கூட்டம் மூலம் காண முடிகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்களையும், பயன்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

சாலை அமைத்தல், குடிநீர் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களில் அதிக அளவில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

எந்த திட்டமாக இருந்தாலும், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும்.

தாமதமான திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் உடன் இணைந்து நிறைவேற்றிட வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், பொதுத்துறை செயலர் ஜெகநாதன், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலர் குமார் ஜெயந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
Share it