Theme Check

விஷேச வீட்டில் சோகம்.. மது குடித்த 6 பேர் திடீரென உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி !!

விஷேச வீட்டில் சோகம்.. மது குடித்த 6 பேர் திடீரென உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி !!

விஷேச வீட்டில் சோகம்.. மது குடித்த 6 பேர் திடீரென உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி !!
X

மதுபான கடையில் மது வாங்கி பருகிய ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் பஹார்பூர் என்ற கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடை பல இயங்கி வருகின்றன. இதில், குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் உள்ளுரைச் சேர்ந்த ஏராளமானோர் மது வாங்கி குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மது குடித்த 6 பேர் திடீரென உயிரிந்தனர். மேலும் பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
d

இதனையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது மஹார்பூர் கிராமத்தில் நடைபெற்ற விசேஷ நிகழ்வில் பங்கேற்ற சிலர் மதுபானம் வாங்கி பருகி உள்ளனர். அதன் பிறகே அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐந்து போலீசார் மற்றும் மூன்று கலால் துறை அதிகாரிகள் என 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் அருந்திய மது வகையின் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கலால் சட்டத்தின் பிரிவுகளுடன் இந்திய தண்டனை சட்ட பிரிவு 272 (உணவு மற்றும் பானங்களில் கலப்படம்), 273 (தீங்கு விளைவிக்கும் உணவு மற்றும் பானங்கள் விற்பனை), 304 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மது குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it