Theme Check

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகை.. தமிழக அரசு உத்தரவு !!

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகை.. தமிழக அரசு உத்தரவு !!

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகை.. தமிழக அரசு உத்தரவு !!
X

தமிழகத்தில் படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

bus

அதன்படி, அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே 1LB, 4LB ஆகிய படுக்கைகளை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் எனவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

எனினும், பேருந்து புறப்படும் இறுதி நேரம் வரையில் அந்த இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in


Next Story
Share it