Theme Check

கொரோனா மையங்களுக்கு சிறப்பு அதிகாரி!தமிழக அரசு அதிரடி!

கொரோனா மையங்களுக்கு சிறப்பு அதிகாரி!தமிழக அரசு அதிரடி!

கொரோனா மையங்களுக்கு சிறப்பு அதிகாரி!தமிழக அரசு அதிரடி!
X

தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் அமுல்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அம்பத்தூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்தும், நோயாளிகளை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். இவர் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையங்களை தினமும் கண்காணித்து தகவல்களை தமிழக அரசுக்கு உடனுக்குடன் தெரிவிப்பார்.
இதன் மூலம் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் பற்றிய முழுமையான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags:
Next Story
Share it