மாநாடு படம் பற்றி யுவன் வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!
மாநாடு படம் பற்றி யுவன் வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’.சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா முதல் அலை காரணமாக படப்பிடிப்பு பணிகளை தொடர முடியாமல் போனது.

அதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற போது கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டது. இதனால் படத்தின் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டன. எனினும் நெருக்கடியாக காலக்கட்டத்திற்கு இடையில் மாநாடு படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. நீண்ட நாட்கள் இந்த படம் தயாரிப்பில் இருப்பதால், ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இந்த திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Hey tweeps #maanaadu single is coming very soon!! #staysafe #spreadlove #lovemusic @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi @U1Records
— Raja yuvan (@thisisysr) June 3, 2021

