Theme Check

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்.. அமைச்சர் நாசர் தகவல்..!

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்.. அமைச்சர் நாசர் தகவல்..!

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்.. அமைச்சர் நாசர் தகவல்..!
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியதாவது: “பால் வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வணிகம் இப்போது தலைதூக்கி உள்ளது.

கடந்த தீபாவளி பண்டிகையின் போது மட்டும் 87 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தரம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தரம் என்றால் அது ஆவின் தான்.

தமிழ்நாட்டில் இனி ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதைபோல, நுகர்வோர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய பத்து வகையான பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.

தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், பணி வழங்குவது போன்ற பல தரப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படும்.

தமிழ்வழிக் கல்வியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்” என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it