Theme Check

கெட்டுப்போன ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை! சேலம் மக்கள் அதிர்ச்சி!!

கெட்டுப்போன ஆட்டிறைச்சியை கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை! சேலம் மக்கள் அதிர்ச்சி!!

கெட்டுப்போன ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை! சேலம் மக்கள் அதிர்ச்சி!!
X

சேலத்தில் கெட்டுப்போன, பழைய ஆட்டிறைச்சியை கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டிறைச்சி தற்போது கிலோ 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் சூரமங்கலம், சித்தனூர், கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கதிரவனுக்கு தகவல் கிடைத்தது. இதனயைத்து அவரது தலைமையில் அங்கு விரைந்த உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள், போலீசார் இறைச்சிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

கெட்டுப்போன ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை! சேலம் மக்கள் அதிர்ச்சி!! வெளியூர்களில் இருந்து பழைய இறைச்சியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தும், சிலர் கெட்டுப்போன இறைச்சியையும் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இந்த சோதனையில், பழைய மற்றும் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 245 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. சில கடைகளில் அறுப்புக்காக வைத்திருந்த நோய்வாய்ப்பட்ட ஆடுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உணவுப்பாதுகாப்பு உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 35 இறைச்சி கடைகளுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டது.

newstm.in

Tags:
Next Story
Share it