Theme Check

பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி… மக்கள் அதிர்ச்சி!!

பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி… மக்கள் அதிர்ச்சி!!

பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி… மக்கள் அதிர்ச்சி!!
X

பிரபல உணவகத்தில் ஆய்வுசெய்த அதிகாரிகள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த கெட்டுப்போன இறைச்சி, முந்தைய நாள் புரோட்டா, நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுகளை பினாயில் ஊற்றி அழித்தனர்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் உணவுகள் சரியில்லை என பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவகத்தின் வெளியே சுத்தமாக இருந்தது. ஆனால் சமையல் அறைக்குச்சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை ஆய்வு செய்தபோது பல நாட்களான கெட்டுப்போன ஆடு மற்றும் கோழியின் இறைச்சி வைத்திருந்தனர்.

food 1

மேலும் முந்தைய நாள் சுட்ட புரோட்டா மற்றும் அதன் மாவு, நூடுல்ஸ், பிரைடு ரைஸ் உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்கள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். காலாவதியான பொருட்களை வைத்து சமைத்து வந்ததும் அம்பலமானது.

அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அதன்மீது பினாயில் ஊற்றி அழித்தனர். இதுகுறித்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் சரமாரி கேள்வி எழுப்பிய அதிகாரிகள் கடை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it