Theme Check

“கோமியத்தை தெளித்தால் பிரச்னை தீரும்” – சொல்கிறார் பாஜக அமைச்சர்!!

“கோமியத்தை தெளித்தால் பிரச்னை தீரும்” – சொல்கிறார் பாஜக அமைச்சர்!!

“கோமியத்தை தெளித்தால் பிரச்னை தீரும்” – சொல்கிறார் பாஜக அமைச்சர்!!
X

மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் எதுவும் வராது என உத்தரப்பிரதேச பா.ஜ.க அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுக் கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதாக பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். ஆனால் இதுவரை அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது கூட மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் கொரோனா வராது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பேசினர்.

குறிப்பாக பா.ஜ.க எம்.பியான பிரக்யா சிங் தாக்கூர், "பசுவின் சாணம், கோமியம் கலந்த பஞ்சகாவ்யா மருந்தை உண்டதன் மூலம் தான் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டதாகக் கூறினார். அதே போல் தனக்கு கொரோனா வராது என்றும் பேசினார்.

Pragya-Thakur

ஆனால் அதன்பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இப்படி பேசிய பா.ஜ.கவை சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்னர் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனர்.

அந்த வகையில் தற்போது உத்தரப்பிரதேச கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் எதுவும் வராது என மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையைப் பரப்பும் வகையில் பேசியுள்ளார்.

bjp minis

பசுவின் கோமியத்தில் கங்கா தேவி வசிக்கிறாள். மாட்டு சாணத்தில் லட்சுமி வசிக்கிறாள் என்று அவர் பேசியுள்ளார். அவரின் மூட நம்பிக்கை பேச்சுக்குப் பலர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it