#BREAKING:- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஸ்ரீசாந்த் !!
#BREAKING:- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஸ்ரீசாந்த் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷ பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி 20- 20 உலகக்கோப்பையை வென்ற தொடரில் சிறப்பாக பந்துவீசினார். ஏன், அத்தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் கேட்ச் பிடித்தார். இதனால் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில், ஸ்ரீசாந்த், ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் அவர் மீது பிசிசிஐ வாழ்நாள் தடையை விதித்தது. எனினும் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் களத்துக்கு திரும்பினார்.
9 ஆண்டுகளுக்கு பிறகு பிசிசிஐ நடத்தும் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீசாந்த், 40 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது கேரள அணிக்காக கடந்த பிப்ரவரியில் மெகாலயா அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருந்தார். இந்த நிலையில், 2வது போட்டிக்காக ஸ்ரீசாந்த் தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.

அவர் இந்திய அணிக்காக 2006 முதல் 2011 வரை விளையாடியவர். கிரிக்கெட் திறனுக்காக ஸ்ரீசாந்த் பேசப்பட்டதை விட சர்ச்சை குறித்து அதிகம் பேசப்பட்டவர். இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியவர். 74 முதல் தர போட்டி, 92 லிஸ்ட் ஏ போட்டி மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்ரீசாந்த்.
இந்த நிலையில் தனது ஓய்வு முடிவை ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார். அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதி எனது முதல் தர கிரிக்கெட் கெரியரை இத்துடன் முடித்துக் கொள்ள நான் முடிவு செய்துள்ளேன், என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
For the next generation of cricketers..I have chosen to end my first class cricket career. This decision is mine alone, and although I know this will not bring me happiness, it is the right and honorable action to take at this time in my life. I ve cherished every moment .❤️🏏🇮🇳
— Sreesanth (@sreesanth36) March 9, 2022
newstm.in

