Theme Check

இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது

இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது

இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது
X

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சில வருடங்களுக்கு முன் விடுதலை புலிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் விதி மீறல்கள் தொடர்பான விசாரணை மற்றும் ஆய்வுக் கூட்டம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் ஜெனீவாவில் இருந்து காணொலி முறையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெறும் எனவும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக நிரந்தரச் செயலாளா் விடுத்த அறிக்கையில் மனித உரிமைக் குற்றச்சாட்டு விஷயத்தில் இலங்கைக்கு முதலில் ஆதரவு அளித்த நாடாக உலக அளவில் இந்தியா அறியப்படுகிறது. அதே போல் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் .நமது நம்பிக்கையையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

உலகின் சில சக்தி வாய்ந்த நாடுகள் இலங்கை விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றன. இலங்கையில் இப்போது அமைதி திரும்பி, சிறப்பான ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. ஆனாலும், இன்னும் தொடா்ந்து போர்க்கால நிகழ்வுகள் தொடா்பாக அந்த நாடுகள் பேசி வருகின்றன. ரஷியா மற்றும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் .

பிரிட்டன், ஜெர்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா, மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it