Theme Check

இலங்கை: உணவு, மருந்து கூட இல்லை.. ஆபத்தான முறையில் தமிழகம் வந்த மேலும் 21 பேர் !

இலங்கை: உணவு, மருந்து கூட இல்லை.. ஆபத்தான முறையில் தமிழகம் வந்த மேலும் 21 பேர் !

இலங்கை: உணவு, மருந்து கூட இல்லை.. ஆபத்தான முறையில் தமிழகம் வந்த மேலும் 21 பேர் !
X

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து ஆபத்தான கடல் பயணம் மூலம் மேலும் 21 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு பெரியளவில் தட்டுப்பாடு உள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கான மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

fisher

இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் வீதியில் இறங்கி அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக இலங்கை தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகளாக தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர்.

fisher

இந்நிலையில், இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாகவும், தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து 20 பேர் ஏற்கனவே தமிழகம் வந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் வந்துள்ளதால் இதுவரை தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

newstm.in

Next Story
Share it