இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை மறுப்பு! மத்திய அரசு கறார்!
இலங்கையில் நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரால் தமிழர்கள் பலர் அகதிகளாக பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றார்கள். மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய மாற்றத்தால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் வசிக்க ..

இலங்கையில் நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரால் தமிழர்கள் பலர் அகதிகளாக பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றார்கள். மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய மாற்றத்தால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி தமிழகம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி நேரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்க புதிய சட்டத்திருத்தம் அனுமதிக்காது. எனவே இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
newstm.in
Tags:
Next Story

