Theme Check

பத்ம பூஷன் விருது பெற்ற முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

பத்ம பூஷன் விருது பெற்ற முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

பத்ம பூஷன் விருது பெற்ற முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
X

கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் சாரதா மேனன். சிறுவயதிலேயே சென்னையில் குடியேறிய இவர், இங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் மருத்துவ மையத்தில் மனநல மருத்துவ படிப்பை முடித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில் , மருத்துவர் சாரதா மேனன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் தமிழக முதவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

1

”இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் தனது உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருத்தத்திற்குள்ளானேன். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்ற அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

மனநோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனிமுத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கிவரும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் (SCARF) அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அவரது சேவையை பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற சாரதா மேனன் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் மருத்துவத் துறையில் இருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
Share it