ஸ்டேன் சுவாமியின் மரணம்.. ஐ.நா சபை வேதனை.. இந்தியாவுக்கு அறிவுரை !!
ஸ்டேன் சுவாமியின் மரணம்.. ஐ.நா சபை வேதனை.. இந்தியாவுக்கு அறிவுரை !!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி. 1957ஆம் ஆண்டு துறவியாக மாறிய அவர் 1970 ஆம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ வரலாறு பட்டம் பெற்றார்.
பாதிரியார் படிப்பதற்காக 14 வருடம் திண்டுக்கல், மணிலா, பிலிப்பைன்ஸில் சென்றுள்ளார். இதன் பின்னர் 15 ஆண்டுகள் பெங்களூர் சமூக கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பு 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு வசிக்கும் பழங்குடி மக்களுக்காகப் போராடி உள்ளார். அங்கேயே தங்கி மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடினார்.

ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி தனது பெயரை ஸ்டேன் சுவாமி என சுருக்கிக் கொண்டு பழங்குடி மக்களுக்காகப் அவர்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடி உள்ளார். 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார் மேலும் சுயசரிதை எழுதி முடிக்கும் முன்பு அக்டோபர் 8ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வைத்து இரவோடு இரவாக தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நடுக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி, தனக்கு ஏற்பட்டிருக்கும் நோயால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை எனவே உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்.ஐ.ஏ.வுக்கு உத்திரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்தது. மும்பை சிறையில் கடந்த 10 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கமால் நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக நீண்ட விசாரணக் கைதியாக இருந்த 84 வயது மனித உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளவர்களை கொரோனா காலத்தில் விடுதலை செய்யவேண்டும் என்பது மிக அவசரமான ஒன்று.
பாதிரியார் ஸ்டேன் சுவாமியின், கருத்து சுதந்திரத்துக்கான தங்களது உரிமையை பயன்படுத்துவதற்காக அமைதியான முறையில் ஒன்றாக கூடுவதற்காக யாரும் கைது செய்யப்படக் கூடாது என்ற வாசகத்தையும் ஐநா குறிப்பிட்டுள்ளது.
#India: We are saddened & disturbed by the death of 84-year-old human rights defender Father #StanSwamy, after prolonged pre-trial detention. With COVID-19, it is even more urgent that States release every person detained without sufficient legal basis.
— UN Human Rights (@UNHumanRights) July 6, 2021
👉 https://t.co/WkoxxTiNCb pic.twitter.com/6MUEUcgxMp
newstm.in

