வைல்டு கார்டு சுற்று மூலம் குக் வித் கோமாளிக்குள் மீண்டும் வந்த நட்சத்திரங்கள்..!

வைல்டு கார்டு சுற்று மூலம் குக் வித் கோமாளிக்குள் மீண்டும் வந்த நட்சத்திரங்கள்..!

வைல்டு கார்டு சுற்று மூலம் குக் வித் கோமாளிக்குள் மீண்டும் வந்த நட்சத்திரங்கள்..!
X

குக் வித் கோமாளி சீசன் 2-வில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்டரி மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எபிசோட் நாளை ஒளிப்பரப்பாகவுள்ளது. தங்களுடைய மனம் கவர்ந்த நட்சத்திரங்களை காண பார்வையாளர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

விஜய் டிவி-யில் வார இறுதி நாட்களில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதனுடைய சீசன் 2-வுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்ற மொழிகளிலும் இதே நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது.பிக்பாஸுக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சீசன் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கனி, அஸ்வின் லக்ஷ்மிகாந்தன் மற்றும் பாபா பாஸ்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். அந்த நிகழ்ச்சியில் இருந்து ஷகீலா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நாளை ஒளிப்பரப்பாகவுள்ள வைல்டு கார்டு சுற்றில் குக் வித் கோமாளி சீசன் - 2-வில் ஷகீலாவுடன் சேர்த்து இதுவரை அனைத்து எபிசோடுகளிலும் போட்டியிட்டவர்களும் பங்கேற்றுள்ளார்கள்.

அதன்படி முதன்முதலாக எலிமினேட் செய்யப்பட்ட மதுரை முத்து அவரை தொடர்ந்து எலிமினேட்டான நடிகை தீபா மேலும், தர்ஷா குப்தா, ரித்திகா, பவித்ரா என அனைவரும் வைல்டு சுற்றில் போட்டியிடவுள்ளனர். தங்களுடைய மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதால், அவர்களுடைய ரசிகர்கள் நாளை ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை காண மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

வைல்டு கார்டு என்ட்ரியில் வெற்றி பெறும் போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார். ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கனி, அஸ்வின், பாபா பாஸ்கருடன் மோதுவார். அதை தொடர்ந்து இறுதிச் சுற்று நடத்தப்பட்டு குக் வித் கோமாளி சீசன் 2-வின் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும்.


Tags:
Next Story
Share it