Theme Check

தடையை ஆவின் பாக்கெட்டில் இருந்து தொடங்குங்கள் -  நீதிமன்றம் காட்டம்

கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலானது. அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தரப்பட்ட விலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தடையை ஆவின் பாக்கெட்டில் இருந்து தொடங்குங்கள் -  நீதிமன்றம் காட்டம்
X

பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலானது. அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தரப்பட்ட விலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.


இதனையடுத்து, உணவு பொருட்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துதலை தவிர்க்கும் வகையில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து நடவடிக்கையை தொடங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருளை உற்பத்தி செய்யுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it