Theme Check

குரூப் தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம்.. 7 பேர் கைது.. பலருக்கு வலைவீச்சு.. அதிர்ச்சி தகவல்கள் !

குரூப் தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம்.. 7 பேர் கைது.. பலருக்கு வலைவீச்சு.. அதிர்ச்சி தகவல்கள் !

குரூப் தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம்.. 7 பேர் கைது.. பலருக்கு வலைவீச்சு.. அதிர்ச்சி தகவல்கள் !
X

குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை கைமாற்றும் கும்பல் குரூப்பில் உள்ளவர்களின் வீட்டில் குடும்ப நண்பர்களை போல் ஒருவரையொருவர் சந்தித்து, மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்துள்ள பகீர் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன.
அதாவது, கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றும் கும்பல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதன்அடிப்படையில், கோட்டயம், கருகச்சால் என்ற இடத்தில் 6 பேரை கைது செய்தனர். அவர்கள் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய தீவிர விசரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

meeting

இந்தக் கும்பல் மெசஞ்சர், டெலிகிராம் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் உறுப்பினர்களை சேர்க்கின்றனர். இதற்காக ‘கப்பிள் மீட் அப் கேரளா’ என்ற பெயரில் ஒரு குரூப் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் குரூப்பில் கேரளா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் என்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கும்பல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணவனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்த 26வயது இளம்பெண், கோட்டயம் அருகே கருகச்சாலை சேர்ந்தவர். அவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு 32 வயது ஆகிறது.

கணவனின் கட்டாயத்தி கடந்த 2 ஆண்டுகளாக வேறு சிலருடன் உறவு கொண்டுள்ளார். இந்த கொடுமை தாங்க முடியாமல் தான் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். தன்னுடைய கணவர் பணத்திற்காகவும், மற்ற பெண்களுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்ற மோசமான ஆசையிலும் தான் இந்த குரூப்பை பயன்படுத்தி வந்ததாக கூறியுள்ளார்.

meeting

ஒரு நபர் அந்த குரூப்பில் உள்ள இளைஞருக்கு போன் செய்து உனது மனைவியை அனுப்பி வை என வேண்டுதல் வைத்தால், அப்போது அவரின் மனைவி பிசியாக இருக்கும்போது, வேறுஒருவரின் மனைவியை அனுப்பி வைப்பதும் இவர்களுடைய பழக்கம் என்ற கொடூர தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, இந்த குரூப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் யாராவது ஒருவது வீட்டில் குடும்ப நண்பர்களை போல சந்தித்து கொள்வார்கள். குறைந்தது 3 முறையாவது இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறும். ஒருவரையொருவர் சந்தித்து நன்றாக பழகிய பிறகு உறவு கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வார்கள்.

அங்கு, ஒருவருக்கொருவர் மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாச உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் டெலிகிராம், மெசஞ்சர்களில் போலி ஐடிகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இதற்கு மனைவிமார்கள் சம்மதிக்காவிட்டாலும் வலுகட்டாயமாக உறவில் ஈடுபடுத்தியுள்ளனர்.

meeting

இதுவரை மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் பல ரகசியங்கள் வெளிவரும் என கோட்டையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபட்டு வரும் கும்பல் கேரளாவில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it