Theme Check

வரும் ஜனவரி முதல் ஆரம்பம்.. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!

வரும் ஜனவரி முதல் ஆரம்பம்.. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!

வரும் ஜனவரி முதல் ஆரம்பம்.. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!
X

வரும் ஜனவரி மாதம் முதல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்த இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நல்லமுறையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் உள்ள இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
Share it