அலங்கார பேனரால் சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து!
கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் திறப்பு விழாவின்போது அ.தி.மு.க அலங்கார பேனரால் ஒரு பேருந்துகூட செல்ல வழி இல்லாமல் நுழைவு வாயிலில் சிக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அடுக்கு மேம்பாலத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். கோவையில் அமைச்சர் வேலுமணி கொடி அசைத்து வாகன போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

அமைச்சர் கொடியசைத்ததும் பாலத்தின் மீது பேருந்து சென்றது. அப்போது பாலத்தின் கீழ் பகுதியில் திறப்பு விழாவிற்காக கட்டப்பட்ட அலங்கார பேனரால் பேருந்து வெளியே வர முடியாமல் நின்றது.உடனே தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேனர் மற்றும் அலங்கார வளைவுகளை தள்ளிவைத்து பேருந்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
newstm.in