புயல்வேக பந்துவீச்சாளர் மலிங்கா ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக் !
புயல்வேக பந்துவீச்சாளர் மலிங்கா ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக் !

ரசிகர்கள் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

இலங்கை அணியில் நட்சத்திர பௌலர் லஷித் மலிங்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுள் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற மலிங்காவுக்கு அதன்பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை. விரைவில் அணிக்குத் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது டி20 ஷூவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கு நன்றிகள். வரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் வாரியம், மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ன் ஸ்டார், கயானா வாரியர்ஸ், மராத்தா வாரியர்ஸ் போன்ற அணிகளுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 85 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர், 107 விக்கெட்களை சாய்த்த அசத்தியிருந்தார்.
Hanging up my #T20 shoes and #retiring from all forms of cricket! Thankful to all those who supported me in my journey, and looking forward to sharing my experience with young cricketers in the years to come.https://t.co/JgGWhETRwm #LasithMalinga #Ninety9
— Lasith Malinga (@ninety9sl) September 14, 2021
newstm.in

