Theme Check

வலிமை ரிலீஸ் ஒத்திவைப்பு!!

வலிமை ரிலீஸ் ஒத்திவைப்பு!!

வலிமை ரிலீஸ் ஒத்திவைப்பு!!
X

வலிமைபட வெளியீட்டை ஒத்தி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமைஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக இருந்தது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அதன்காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்படும் சூழலும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

Valimai_Ajith

பார்வையாளர்களும் ரசிகர்களுக்கும்தான் எப்போதும் எங்களுடைய மகிழ்ச்சியின் ஊற்று. கடினமான நேரங்களிலும் அவர்கள் கொடுத்த எதிர்பார்ப்பில்லாத அளவற்ற அன்புதான் எங்களுடைய கனவு படத்தை வெற்றிகரமாக எடுப்பதற்கு உதவியது.

ஆனால், எங்களுடைய எல்லா முடிவுகளையும் விட பார்வையாளர்களின் பாதுகாப்புதான் முக்கியமானதாக உள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ள இந்தநிலையில், கொரோனா பாதிப்பு இயல்புநிலையை அடையும் வரையில் வலிமை படம் வெளியீடை ஒத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம்என்று குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Next Story
Share it