Theme Check

இவர்கள் மீது கடும் நடவடிக்கை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!

இவர்கள் மீது கடும் நடவடிக்கை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!

இவர்கள் மீது கடும் நடவடிக்கை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!
X

தமிழக அரசு தேர்வுத் துறை வழங்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு அஞ்சல் துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 200 வடமாநிலத்தவர்கள் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: “வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடு பள்ளிகளில் படித்தது போன்ற போலி சான்றிதழ்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் சேர்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வியானது பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநிலப் பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசிய பட்டியலில் உள்ளது. கடந்த 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it