Theme Check

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை..!!

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை..!!

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை..!!
X

சமீபகாலமாக பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தவகையில், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில், கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் விசாரணையில், மதமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் சமீபத்தில் தஞ்சையை சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை சுட்டிக்காட்டி குமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வந்ததன் அடிப்படையில், அதனை தடுக்க உரிய விதிகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும், மாநில அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும், மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தொடர்ந்து வேறு எந்த பள்ளியிலும் இது போன்ற புகார்கள் எழவில்லை அவ்வாறு ஏதும் புகார்கள் வந்தால் அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் எந்த பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் நடந்தது என்ற எந்தவொரு விவரங்கள் இல்லாமலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது விசாரணைக்கு உகந்ததல்ல என கூறிய வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் தொடங்க கூடாது என்றும், அதை வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தால் கூட அது மதமாற்றம் செய்வது என்பது உரிமை அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

Next Story
Share it