Theme Check

கர்நாடகா, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு !!

கர்நாடகா, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு !!

கர்நாடகா, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு !!
X

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய மாநில அரசுகளால் பின்பற்றப்பட்டு வந்த போதிலும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சமீபமாக அதிகரித்து வருவதையடுத்து மிகத் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கர்நாடகா கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கர்நாடகாவில் நுழையும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளது. எல்லைப்பகுதியில் காலையிலிருந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

இன்று முதல் நான்கு எல்லைகளிலும் மிகத் தீவிரமாக இவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் எல்லையில் நுழைய விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆர்டி,பிசிஆர் சோதனை எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.நான்கு எல்லைகளிலும் சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it