Theme Check

வேலை நிறுத்தம் வாபஸ்.. உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு..!

வேலை நிறுத்தம் வாபஸ்.. உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு..!

வேலை நிறுத்தம் வாபஸ்.. உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு..!
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

சமீபத்தில், அதிக சத்தத்தை வெளியிடும் சரவெடி, பேன்சி ரக பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், சிவகாசியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல்படவில்லை.

இந்நிலையில், பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்’ சார்பில் கடந்த 21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், பட்டாசு சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டாசு ஆலைகளை திறக்குமாறும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி பட்டாசு தொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது.

இதில் சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது. வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வரும் 28-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it