தன்னந்தனியே படகில் பள்ளிக்கு செல்லும் மாணவி!
தன்னந்தனியே படகில் பள்ளிக்கு செல்லும் மாணவி!

மழை பெய்து, தனது கிராமம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், தன்னந்தனியே படகில், ஆர்வமாக விடாமுயற்சியுடன் மாணவி ஒருவர் பள்ளிக்குச் சென்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பெய்த கனமழையால், அந்த மாணவி வசிக்கும் கிராமம் முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்தது.
ஏற்கெனவே கொரோனாவால் பள்ளிகள் மாத கணக்கில் மூடப்பட்டிருந்த நிலையில், இப்போது தான் திறந்திருக்கிறார்கள். மேலும் வகுப்புகளை தவற விடக்கூடாது என்று வெள்ள நீரில் மெதுவாக தானே தன்னந்தனியாக படகை செலுத்திக் கொண்டு, பள்ளிக்கு சென்று வருகிறார் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா சஹானி.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, என்னிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. அதனால் என்னால் வகுப்புகளை ஆரம்பத்தில் இருந்தே கவனிக்க முடியவில்லை. பள்ளிக்கு சென்று படித்தால் தான் விடுபட்ட பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் அந்த மாணவி.
Uttar Pradesh Undeterred by floods, class 11 student Sandhya Sahani rows a boat daily to reach her school in Bahrampur, Gorakhpur I couldn't take online classes as I didn't have a smartphone When schools reopened, floods hit the area so I decided to reach school by a boat, pic.twitter.com/w44z5AJ2QM
— Farhazkhan (@farhazkhanAIMIM) September 5, 2021

