Theme Check

மாணவி தற்கொலை வழக்கு- வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு !

மாணவி தற்கொலை வழக்கு- வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு !

மாணவி தற்கொலை வழக்கு- வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு !
X

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் விஷம் அருந்திய இந்த மாணவி, கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவியை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து அதிக வேலைகள் கொடுத்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக புகார் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிய பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

suicide

மாணவி சுமார் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார், வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி பேசியதை வீடியோ பதிவு செய்த, முத்துவேல் என்பவர் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

suicide

மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக போலீசாரிடம் புகார் அளித்த பெற்றோர், மதமாற்றம் தொடர்பாக கூறவில்லை. விசாரணையில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் தரப்பிலும் மதமாற்றம் தொடர்பாக எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், சில நாட்கள் கழித்து இரண்டாவதாக அளித்த புகாரில் தான் பெற்றோர் மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டினர்.

newstm.in

Next Story
Share it