Theme Check

மாணவி மரணம் எதிரொலி.. அரசு அதிரடி அறிவிப்பு..!

மாணவி மரணம் எதிரொலி.. அரசு அதிரடி அறிவிப்பு..!

மாணவி மரணம் எதிரொலி.. அரசு அதிரடி அறிவிப்பு..!
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது.

அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட பலவும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வக்குமார் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story
Share it