Theme Check

#BREAKING:- மாணவர்கள் 8 மணிக்கு வர வேண்டாம்.. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!

#BREAKING:- மாணவர்கள் 8 மணிக்கு வர வேண்டாம்.. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!

#BREAKING:- மாணவர்கள் 8 மணிக்கு வர வேண்டாம்.. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!
X

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (5-ம் தேதி) முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 6-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 3,119 மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது.

12-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 37,317 மாணவர்களும், 11-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 83,884 பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 56,474 பேரும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாளை (5-ம் தேதி) தொடங்கவுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மாணவர்கள் காலை 8 மணிக்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கு 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Next Story
Share it