Theme Check

மாணவர்களே, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை.. விண்ணப்பிக்க இதுவே இறுதி நாள்..!

மாணவர்களே, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை.. விண்ணப்பிக்க இதுவே இறுதி நாள்..!

மாணவர்களே, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை.. விண்ணப்பிக்க இதுவே இறுதி நாள்..!
X

11-ம் வகுப்பு முதல் பிஹெச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்‌ அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 11-ம்‌ வகுப்பு முதல்‌ பிஹெச்‌டி வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவ உட்பட) பயிலும்‌ இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதங்களைச்‌ சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021 - 2022-ம்‌ ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு மற்றும்‌ தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்‌ கீழ்‌ (புதியது மற்றும்‌ புதுப்பித்தல்‌) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை http://www.scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ/ மாணவியர் மேற்படி காலக்கெடுவிற்குள்‌ விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அனைத்து கல்வி நிலையங்களும்‌ சிறுபான்மையினர்‌ கல்வி உதவித்தொகை கோரி மாணவ, மாணவியர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்‌ தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில்‌ சரிபார்க்க வேண்டும்‌.

தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியரின்‌ விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில்‌ சுணக்கம்‌ காட்டும் கல்வி நிலையங்களின்‌ மீது அரசால்‌ தக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி மேற்படிப்பு மற்றும்‌ தகுதி மற்றும் வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.01.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Next Story
Share it