மாணவர்களே... வரும் 31ம் தேதி வரை விடுமுறை: கல்வித்துறை அறிவிப்பு..!
மாணவர்களே... வரும் 31ம் தேதி வரை விடுமுறை: கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து பிஇ, கலை-அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது. அந்த மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
அத்துடன், 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

