மாணவர்களே, இனிமேல் அரஸ்ட் தான்.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை..!
மாணவர்களே, இனிமேல் அரஸ்ட் தான்.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை..!

ரூட்டு தல பிரச்சனையில் சென்னை கல்லூரி மாணவர்கள் நேற்று மோதிக் கொண்டதால், இனி வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவர் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில், ரூட்டு தல பிரச்சனை தொடர்பாக நேற்று 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில், மாணவர்கள் மீதே தவறு உள்ளது.
எவ்வளவோ அறிவுரை கூறியும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியே வருகின்றனர். அத்துடன், அறிவுரை கூறும் கண்டக்டர் உள்ளிட்ட அரசு ஊழியர்களையும் தாக்கி வருகின்றனர்.
இதுபோன்ற மாணவர்களால் சக பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Next Story

