Theme Check

அசத்தல் அறிவிப்பு... ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்!!

அசத்தல் அறிவிப்பு... ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்!!

அசத்தல் அறிவிப்பு... ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்!!
X

ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகளை படிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒரு மாணவர் ஒரு நேரத்தில் ஒரு டிகிரி மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன்/ குறுகிய கால / டிப்ளமோ படிப்புகளைப் படிக்க மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது.

இந்நிலையில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர் இரண்டு டிப்ளமோ படிப்புகளையோ, 2 இளங்கலைப் படிப்புகளையோ அல்லது 2 முதுகலை படிப்புகளையோ ஒரே நேரத்தில் படிக்க முடியும்.

UGC

இரண்டு முழுநேரப் படிப்புகளையும் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ படிக்கலாம். இதுதவிர முதுகலைப் படிப்புக்குத் தயாரான ஒரு மாணவர், தனக்கு சம்பந்தமில்லாத வேறு ஒரு தளத்தில் இளங்கலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பினால், அதற்கும் யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது.

எனினும் கல்லூரி வகுப்புகள் மட்டும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020- யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.

convocation1

அந்த வகையில் இனிமேல் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது.

newstm.in

Next Story
Share it