Theme Check

அசத்தல் ஆட்டம்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை !

அசத்தல் ஆட்டம்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை !

அசத்தல் ஆட்டம்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை !
X

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து மீண்டும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். இந்தியாவின் சார்பிலும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டியில் முதல்முறையாக இந்தாண்டு முதல் பதக்கத்தை உறுதி செய்து வீராங்கனை பவினா பென் படேல் அசத்தியுள்ளார். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.

bhavina

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ஆம் தரநிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான செர்பியா நாட்டின் போரிஸ்லாவை எதிர் கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் பவினா வீழ்த்தினார். இவர் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா. இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதேபோல், ஆடவருக்கான வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவர் மொத்தம் 699 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it