விஜய் பாடலுக்கு நடனமாடும் டிடியின் அசத்தலான வீடியோ!

விஜய் பாடலுக்கு நடனமாடும் டிடியின் அசத்தலான வீடியோ!

விஜய் பாடலுக்கு நடனமாடும் டிடியின் அசத்தலான வீடியோ!
X

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், தமிழ் நடிகையுமாக வலம் வந்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் டிடி என்னும் திவ்ய தர்ஷினி. இவர் சமூகவலைத்தளங்களில் மகளிர் தின வாழ்த்து செய்தியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலின் பின்னணியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிலைகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு அட்டைகளைக் காண்பித்து நடனமாடி இருந்தார். அந்த அட்டைகளில்

36 + சிங்கிள்
36 + விவகாரத்தானவர்
36 + குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை
36 + ஆர்த்ரைட்டீஸ்
ஆனால் இன்னும், இன்னும் நான் 36 + மகிழ்ச்சியாக உள்ளேன் .ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வித்தியாசமானவை. அவரவர்களுடைய வாழ்க்கையை அனுபவித்து வாழத் தொடங்குங்கள். மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்.மகளிர் தின வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். டிடியின் இந்த வித்தியாசமான வாழ்த்துக்களுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


Tags:
Next Story
Share it