அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை!
மானியம் இல்லாத சிலிண்டர்களுக்கான விலை மாநில தலைநகரங்களில் 53 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை 50 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். சமீபத்தில் கூட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

மானியம் இல்லாத சிலிண்டர்களுக்கான விலை மாநில தலைநகரங்களில் 53 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை 50 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். சமீபத்தில் கூட மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனைத் கண்டித்து போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இன்று (மார்ச் 1) முதல் 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சிலிண்டரின் விலை 53 முதல் 56.5 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் 53 ரூபாய் விலை குறைத்துள்ளது.
டெல்லியில் 858 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் இனி 805 ரூபாய்க்கும், சென்னையில் 881 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 826 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கும் இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

